செருப்பால் சிக்கிய கோடீஸ்வர கொள்ளையர்கள்..! காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

By Ajmal KhanFirst Published Jun 5, 2022, 1:24 PM IST
Highlights

சி.சி டி.வியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி  3 கோடீஸ்வர வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
 

கொள்ளையர்களை தேடிய போலீஸ்

கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர் வழிப்பறி திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் நடந்த செயின் பறிப்பு சம்பவம்  தொடர்பாக அங்கு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேனீர் கடை ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 நபர்கள் நின்றுகொண்டிருந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரிக்க முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர் .

காட்டிக்கொடுத்த செருப்பு

இதேபோல் ஒரு கும்பல் பல்லடம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடும் சிசிடிவி காட்சி ஒன்று போலிசாருக்கு கிடைத்தது. அதில்  பதிவாகியிருந்த நபரின் கால் செருப்பை ஆய்வு செய்து விசாரித்தபோது, அந்த செருப்பு கஞ்சா வழக்கில் கைது கைது செய்யப்பட்டிருந்த மருதாச்சலம் என்பவருடையது என தெரியவந்தது. கால் செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கலங்கல் பகுதியில் பதுங்கியிருந்த மருதாசலத்தை பிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில் சிவானந்தா காலனி சேர்ந்த சதீஷ்,  கணபதி பகுதியை சேர்ந்த நடராஜன் மூவரும் சேர்ந்து வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை அடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் நடராஜன் தனது 14 வயதில் இருந்து திருடி தற்போது 51 வயதிலும் திருட்டு தொழில் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், இவர் மீது வழிப்பறி,கொள்ளை உள்ளிட்ட 80 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது..

ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்

திருடி சேகரித்த பணத்தில் பல்வேறு பகுதிகளில் வீ்டுமனைகள் வாங்கி முதலீடு செய்துள்ளார்.மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல பல்லடம் பகுதியில் செல்போன் கடையை நோட்டமிட்டு திருடிய கும்பலும் இவர்கள்தான் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதையும் படியுங்கள்

ஒரு வருட திமுக ஆட்சி 10க்கு எத்தனை மதிப்பெண்..! ஸ்டாலின் ஆட்சி வீழ்ச்சியா? வளர்ச்சியா? கருத்து கணிப்பு முடிவு

click me!