இளம்பெண்ணுடன் கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் உல்லாசம்...? பணம் கொடுத்து பேரம் பேசுவதாக பெண் கதறல்

By Ajmal KhanFirst Published Jun 5, 2022, 11:03 AM IST
Highlights

வாழ்நாள் முழுவதும் நான் சந்தோஷமாக வாழ்வதற்கு தேவையான பணத்தை பெற்றுச் செல்லுமாறு பேரம் பேசுவதாகவும், .தனக்கு பணம் வேண்டாம் எனது கணவரை மட்டும் என்னுடன் சேர்த்து வைத்தால் போதும் என  கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மகனை திருமணம் செய்த இளம்பெண் கதறல்.

இளம்பெண்ணுடன் காதல்

தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடையான ஸ்ரீகணபதி சில்க்ஸ். இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு,கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள கிளையை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் (31) முருகன் நடத்திவருகிறார்.இந்தக் கடையில் ஜவுளி விற்பனை மட்டுமல்லாது அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைக்குள் அமைந்துள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தை பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டி யைச் சேர்ந்த சின்னகருப்பன் என்பவரது மகள் மேனகா (29) என்பவர் நடத்தி வந்தார். அந்த வகையில் கடை உரிமையாளரான முருகனுக்கும் மேனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேனகாவைத் திருமணம் செய்து கொள்வதாக முருகன் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மேனகாவும்,முருகனும் கடைக்குள் உள்ள ஒரு அறையிலும், முருகன் தங்கியுள்ள பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் பல முறை உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களது காதலுக்கு ஜவுளிக்கடையில் மேனேஜராக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த வினோத் என்பவரும் உதவியுள்ளார்.வினோத் ஜவுளிக் கடையில் உள்ள சமயங்களில் மேனகாவும்,முருகனும் பழனிசெட்டிபட்டியில் உள்ள வினோத்தின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கும் தனிமையில் இருந்துள்ளனர். . இந்த நிலையில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான பிரசன்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

உல்லாசத்தில் இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன்

இந்த விவகாரத்தை மறைத்து மறுநாளும் முருகன்,மேனகாவுடன் பழனிசெட்டிபட்டியிலுள்ள மேனேஜர் வினோத்தின் வீட்டிலும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது முருகனுக்கு  நடைபெற்ற நிச்சயதார்த்தம் தொடர்பான தகவலும்   முருகன்- பிரசன்னா நிச்சயதார்த்தம் தொடர்பான படமும் மேனகாவின் கிடைத்துள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த மேனகா முருகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.உடனடியாக முருகன் மேனேஜர் வினோத்தை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு வினோத்,முருகன் மேனகா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி வினோத்தின் முன்னிலையில், பழனிசெட்டிபட்டியில் உள்ள மேனேஜர் வினோத் வீட்டில் வைத்து  முருகன் மேனகா கழுத்தில் தாலி கட்டியுள்ளார். திருமணம் நடைபெற்ற மறுநாள் மேனகாவிற்கு போன் செய்த முருகன்,நான் பிரசன்னாவை பல ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன்.தான் பிரசன்னாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், உன்னுடன் நடைபெற்ற திருமணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை திருமணம் செல்லாது. பிரசன்னாவுடன் திருமணத்திற்குப் பின் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகப் போகிறேன் என்று கூறிவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மேனகா கடந்த மார்ச் 14-ஆம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

சிறையில் அடைக்கப்பட்ட கடை உரிமையாளர்

இந்தநிலையில் முருகன் கடந்த ஏப்ரல்-21 மாலை காவல்துறையினரிடம் சரணடைந்தார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முருகனை,மேனகா தொடர்பு கொள்ள முயன்றபோது,முருகன் அவரை சந்திப்பதையும் பேசுவதையும் தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய முருகனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும்,தான் 35 லட்சம் செலவில் கணபதி சில்க்ஸ் கடைக்குள் அமைத்திருந்த அழகு சாதன பொருட்கள் விற்பனையகத்தை மீண்டும் திறந்து நடத்த அனுமதிக்கவேண்டும், அல்லது அதில் உள்ள தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேனகா கடந்த 4 நாட்களாக தினந்தோறும் கணபதி சில்க்ஸ் கடைக்குள் பதாகையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கணபதி சில்க்ஸ் உரிமையாளர்களான மாரியப்பன் உள்ளிட்டோர்,கணபதி சில்க்ஸ் கடைக்குள் சுமார் 35 லட்சம் முதலீட்டில் மேனகா நடத்தி வந்த அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் அந்த கடை இருந்த சுவடே தெரியாமல் செய்துவிட்டதாகத் தெரிகிறது.இந்த விவகாரம் தொடர்பாக கணபதி சில்க்ஸ்-ல் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த ஜூன் 3ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மேனகாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மேனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சுமத்தி மனு அளித்தனர். இந்த நிலையில் தனது கணவரை கடத்தி வைத்துள்ளதாகவும் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகமாக உள்ளது என்றும் மேனகா கண்ணீருடன் நேற்று பேட்டி அளித்தார். 

பணம் கொடுத்து மிரட்டல்

இது தொடர்பாக அவர் கூறும்போது, சிறையிலிருந்து வெளிவந்த தனது கணவரை நேரில் சந்திப்பதற்காகவும், தொலைபேசியில் பேசவும் பலமுறை முயன்றும் முடியவில்லை என்றும், அவரை அவரது சித்தப்பா கடத்தி வைத்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது.தங்களது பணபலத்தால் எனக்கு ஆதரவாக வரும் அனைவரையும் விலை பேசுகின்றனர்.மேலும் வாழ்நாள் முழுவதும் நான் சந்தோஷமாக வாழ்வதற்கு தேவையான பணத்தை பெற்றுச் செல்லுமாறு என்னிடமும் பேரம் பேசுகின்றனர்.எனக்கு பணம் வேண்டாம் எனது கணவரை மட்டும் என்னுடன் சேர்த்து வைத்தால் போதும். வாழ்நாள் முழுவதும் அவருக்கும் சேர்த்து சம்பாதித்துக் கொடுக்க என்னால் முடியும்.பண பலத்தால் காவல்துறையையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்கள் மீது எந்த ஒரு புகார் அளித்தாலும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தார். .மேலும் தனது கணவரை மீட்பதற்காக நாடே தன்னைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம் மிகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மாரியப்பனின் மகன் முருகன் மற்றும் மேனகா தொடர்பான இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !
 

click me!