சேலம் மாவட்டத்தில் தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செகனஸ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். செகனஸ்சின் நிலையை அறிந்து கொண்ட தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் அவரிடம் ஆசை வார்த்தை கூறி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
நாளடைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், செனஸ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மாதேஷ் கண்டித்துள்ளார்.
குடிபோதையில் விபரீதம்; கட்டிட தொழிலாளி தலை துண்டித்து கொடூர கொலை
இருப்பினும் இருவருக்கும் இடையேயான உறவு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக மாதேஷ், செகனஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே காதலியின் கழுத்தை நெரித்து மாதேஷ் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்வருடன் நேருக்கு நேர் வாதம் செய்த அரசு ஊழியர்கள்; டென்ஷனான முதல்வரால் பரபரப்பு
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநரான மாதேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.