சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. பிரபல ரவுடிக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு..!

Published : Feb 04, 2023, 08:36 AM ISTUpdated : Feb 04, 2023, 08:46 AM IST
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. பிரபல ரவுடிக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு..!

சுருக்கம்

சென்னை திருமங்கலம் நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் ரவுடி பத்மநாபன் (32). இவர் மீது வில்லிவாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

சென்னையில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ரவுடி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னை திருமங்கலம் நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் ரவுடி பத்மநாபன் (32). இவர் மீது வில்லிவாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி டபுள் ரஞ்சித்தை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. கறி விருந்துக்கு அழைத்து நண்பனின் கதையை முடித்த கள்ளக்காதலன்.. வெளியான பகீர் தகவல்.!

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ரவுடி பத்மநாபன் சிறையில் இருந்த ஜாமீனில் வெளியே வந்த அவர் அப்பகுதியில் பெயிண்ட் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பத்மநாபனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இதையும் படிங்க;- வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் உடனே திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பத்மநாபனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் ரவுடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!