156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்... காவல்துறையினருக்கு கோவை கண்காணிப்பாளர் பாராட்டு!!

By Asianet TamilFirst Published Feb 3, 2023, 8:27 PM IST
Highlights

கோவை அருகே பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய 156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை அருகே பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய 156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகளை  விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம்  மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் நீலாம்பூர் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் மாயமான பள்ளி மாணவின் உடல் எலும்பு கூடுகளாக மீட்பு

அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அங்கிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த திலீப் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்து ரூ.10,81,600 மதிப்புள்ள 156 கிலோ எடைகொண்ட (626 Packets) 27,040  கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். காவல்துறையினரிடன் இந்த செயலை பாராட்டும் விதமாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகளை நேரில் சென்று பாராட்டியதோடு வெகுமதியாக ரொக்கமும் வழங்கினார்.

இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த மனைவி!!

மேலும் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!