வாலாஜாபேட்டை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கத்தியால் மனைவி வெட்டி கொலை செய்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (48). கட்டிட மேஸ்திரியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (38) ராணிப்பேட்டையில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள ஏழுமலை அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். வீட்டுக்கு வரும் ஏழுமலை அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் அதிகப்படியாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஏழுமலை ஆபாச வார்த்தைகளால் மனைவியை திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கலைச்செல்வியை அடித்தும் உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கலைச்செல்வி தன்னை பாதுகாத்துக் கொள்ள அருகில் இருந்த கத்தியை எடுத்து ஏழுமலை கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஏழுமலை ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
பழனி முருகன் கோவிலி பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்த வானதி சீனிவாசன்
சம்பவம் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ஏழுமலையின் சடலத்தை மீட்டு வேலுர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரதே சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கலைச்செல்வியை கைது செய்த வாலாஜாபேட்டை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தற்காப்பிற்காக தன் கணவனை கத்தியால் வெட்டியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, கலைச்செல்வி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.