என் கண்ணு முன்னாடியே.. மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கொன்றேன்.. கணவர் கூறிய பகீர் தகவல்.!

Published : Feb 02, 2023, 10:22 AM ISTUpdated : Feb 02, 2023, 10:31 AM IST
என் கண்ணு முன்னாடியே.. மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கொன்றேன்.. கணவர் கூறிய பகீர் தகவல்.!

சுருக்கம்

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற மணிகண்டனை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது. 

கள்ளக்காதல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏட்டு உட்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்து மக்கள் கட்சியில் மதுரை தென்மாவட்ட  துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற மணிகண்டனை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது. 

இதையும் படிங்க;- மூன்று குழந்தைகளின் தாய் செய்யுற வேலையா இது.. 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 32 வயது பெண்

 இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படை ஏவி மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக  ஏட்டு ஹரிஹரபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். ஏட்டு ஹரிஹரபாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையும் படிங்க;- வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!

இந்த கொலை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்;-மணிகண்டனின் நகைக்கடைக்கு சில மாதங்களுக்கு முன், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபு மனைவியுடன் சென்று நகை  வாங்கி உள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏட்டு ஹரிஹரபாபு வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது மனைவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோல, ஒரு நாள் மனைவியுடன் தனிமையில் இருந்ததை பார்த்த ஏட்டு ஆத்திரமடைந்து கூலிப்படையை ஏவி மணிகண்டனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!