அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (44). திங்கள்கிழமை மாலை விருதுநகரில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு சென்றார். வழியில் பாலவநத்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த ஏற்கனவே அறிமுகமான நார்த்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை முத்துச்செல்வம் தனது காரில் அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க;- தலையணையுடன் உடலுறவு, சக மாணவிகள் பற்றி ஆபாசம்.. அதிர வைக்கும் ராகிங் கொடுமை.. வெளியான பகீர்.!
அப்போது, கோபாலபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்தப் பெண் காரில் இருந்து இறங்கியதாக தெரிகிறது. இந்நிலையில், காரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் மற்றும் மற்றொரு காரில் வந்த 5 பேர் சேர்ந்து, அந்தப் பெண்ணை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தடுக்க வந்த ஆண் நண்பருக்கும் சரமாரி அடி உதை விழுந்தது.
பின்னர், அந்த பெண்ணை தங்களின் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அப்பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை, பணம், செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுததியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பெண் கூட்டு பலாத்காரம் சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியுடன் உல்லாசம்..! தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலர்களை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!