ஆசைவார்த்தை கூறி என் பொண்ண நாசா செஞ்சுட்டா.. காவல் நிலையத்தில் கதறிய தாய்..!

By vinoth kumar  |  First Published Mar 9, 2023, 2:45 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித் (22). கூலிவேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. 

12ம் வகுப்பு பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித் (22). கூலிவேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?

அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் மாணவியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.  

இதையும் படிங்க;-  ஏதாவது ஒரு ஏரியில் மிதப்பேன்!சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த நிஷாந்த் தற்கொலை! 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு

இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்தை போலீசார் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 12ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  எனக்கு வயசு ஆச்சுன்னு! கழட்டி விட்டுட்டு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொன்றேன்!பாமக நிர்வாகி கொலையில் பகீர்

click me!