அரியலூரில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

By Velmurugan s  |  First Published Mar 9, 2023, 2:09 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித். இவர் அதே பகுதியில் பக்கத்து ஊரில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது  சிறுமியை காதலிப்பதாக கூறி அவ்வபோது அவரை சந்தித்து பேசி உள்ளார். ஆனால், காதலுக்கு அந்த சிறுமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  

இந்த நிலையில் அஜித் அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

பொள்ளாச்சியில் பயங்கரம்: பிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி

இதனைத் தொடர்ந்து அஜித்தை காவல் நிலையம் அழைத்து வந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 

ஜெயங்கொண்டத்தில் பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; 14 ஆண்டுகள் சிறை 

இதையடுத்து காவல் துறையினர் அஜித்தை  போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!