கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம்... ஆடிப்போன திமுக..!

Published : Jul 27, 2020, 02:23 PM IST
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டம்... ஆடிப்போன திமுக..!

சுருக்கம்

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்தது

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்தது

கருப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப்’ சேனலில், ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக, தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகின. அத்துடன், கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘யு டியூப் சேனலை முடக்க வேண்டும்; மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கும், சேனல் நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழகம் முழுவதும் பாஜக இந்து இயக்கங்கள் புகார்கள் அளித்தது.

இதனால், மத்திய குற்றப்பிரிவு போலீசார், கருப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல், சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்தல் என, ஐந்து சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சேனலின் நிர்வாகி, செந்தில்வாசன், 49; புதுச்சேரியைச் சென்று சரணடைந்த மற்றொரு நிர்வாகி சுரேந்தர் நடராஜன், 38, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சுரேந்தரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மூலம் கந்தசஷ்டி கவசத்தை அவமதித்ததாக சுரேந்தரன் கைதானார். சுரேந்தரன் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!