பல்வேறு ஆண்களுடன் உல்லாசம்.. கள்ளக்காதல் செய்த மனைவியை கதற கதற கொலை கணவன்.! அதிர்ச்சி சம்பவம்

Published : May 03, 2022, 02:51 PM IST
 பல்வேறு ஆண்களுடன் உல்லாசம்.. கள்ளக்காதல் செய்த மனைவியை கதற கதற கொலை கணவன்.! அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

சென்னை அம்பத்தூர், நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (வயது 26). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவருக்கும், பீகாரை சேர்ந்த ரஷியா கத்துனா (22) என்ற பெண்ணுக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் ஆனது. 

கணவன்-மனைவி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து மேற்கண்ட முகவரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். ஹரிஷ் பிரம்மா, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு ரஷியா, கட்டிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு விட்டதாக கூறி அவரை ரத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரிஷ் பிரம்மா கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரஷியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அம்பத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, ரஷியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ரஷியா, கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார், ஹரிஷ் பிரம்மாவை பிடித்து விசாரித்தனர். போலீசாரிடம் ஹரிஷ் பிரம்மா அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘கடந்த 3 மாதங்களாக எனது மனைவி ரஷியா, வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசி வந்தாள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சம்பவத்தன்று அவளை கட்டையால் தாக்கிவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ரஷியா சுயநினைவின்றி கிடந்தாள். 

பின்னர் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். ஆஸ்பத்திரியில் எனது மனைவி கட்டிலில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்ததாக நாடகமாடினேன். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கிக்கொண்டேன்’ என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், மனைவியை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு கட்டிலில் இருந்து தவறி விழுந்ததாக நாடகமாடிய ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க : Bandh : மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு வாழ்க்கை பாதிக்குமா ?

இதையும் படிங்க : 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?