பல ஆண்டுகளாக குழந்தை இல்லை... பெண் எடுத்த அதிரடி முடிவு... அதற்கு இப்படியா?

By Kevin KaarkiFirst Published May 3, 2022, 12:57 PM IST
Highlights

ஒரு குழுந்தையை கொண்டு வந்து கொடுத்தால், அதிக பணம் தருவதாக கல்பனா ராவகத் மோனிகா குமாரி என்பவரிடம் தெரிவித்து இருக்கிறார்.

தனக்கு பிறந்த குழந்தை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதை அடுத்து, வேறு ஒரு குழந்தையை கடத்தி தனது மகனாக வளர்க்க நினைத்த தாய் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு உள்ளார். 

லக்னோ பகுதியில் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி வர மர்ம நபர்களை பணியமர்த்தி ரூ. 20 ஆயிரம் சம்பளம் கொடுத்து இருக்கிறார். தனக்கு பிறந்த குழந்தை உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதால், இந்த பெண் வேறொருவரின் குழந்தையை கடத்தி வந்து தனது மகன் போன்று வளர்க்க திட்டமிட்டார். 

புகார்:

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மூன்று குழந்தைகளுக்கு தந்தையான முகேஷ், தனது இரண்டு வயது மகனை காணவில்லை என லக்னோ பிரிவை சேர்ந்த அரசு ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மகன் ரெயில்வே நிலையத்தின் ஆறாவது பிளாட்பார்மில் மூன்று மைனர் மகன்களுடன் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது யாரோ வந்து தனது இளைய மகனை தூக்கிச் சென்று விட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இதை அடுத்து அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சேர்ந்து குழந்தையை தூக்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வீடியோ காட்சிகளின் படி, மைனர் சிறுவனை ஆறாவது பிளாட்பார்மில் இருந்து தூக்கிக் கொண்ட மர்ம நபர்கள் வேகமாக வெளியேறி அங்கு இருசக்கர வாகனத்தில் காத்துக் கொண்டு இருந்த இரு பெண்களிடம் கொடுக்கின்றனர். பின் அங்கிருந்து மூவரும் கிளம்பி செல்கின்றனர். 

சி.சி.டி.வி. வீடியோ:

வீடியோ காட்சிகளில் கடத்தல்காரர்களை உறுதிப்படுத்தியதும், அரசு ரெயில்வே காவலர்கள் குழந்தையை தேடும்  பணிகளை துவங்கினர். தேடுதல் வேட்டை துவங்கிய 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டனர். மேலும் இந்த கடத்தில் தொடர்புடைய  ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இதுபற்றி விசாரணை நடத்திய எஸ்.ஐ. சௌமித்ரா யாதவ் கூறும் போது, "கடத்தப்பட்ட குழந்தை கல்பனா ராவத் என்பவருக்கு ரூ. 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கல்பனா ராவத் உதவியாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு பிறந்த குழந்தை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து, நீண்ட காலமாக குழந்தையின்றி மன வேதனையில் வாழ்த்து வந்தார். தனக்கு ஒரு குழுந்தையை கொண்டு வந்து கொடுத்தால், அதிக பணம் தருவதாக கல்பனா ராவகத் மோனிகா குமாரி என்பவரிடம் தெரிவித்து இருக்கிறார்." என தெரிவித்தார்.

click me!