நகைபறிப்பில் ஈடுபட்ட காதலர்கள்.. அசால்ட் சம்பவம் செய்த போது வசமாக சிக்கிய காதல் ஜோடி !!

Published : May 03, 2022, 12:02 PM IST
நகைபறிப்பில் ஈடுபட்ட காதலர்கள்.. அசால்ட் சம்பவம் செய்த போது வசமாக சிக்கிய காதல் ஜோடி !!

சுருக்கம்

திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் தப்பி சென்றார். 

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே வழக்கம்போல ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்தார்.  தொடர்ந்து அந்த வாலிபர் காளியம்மாளிடம் பேச்சு கொடுத்து, ஒரு முகவரியை கேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் தப்பி சென்றார். 

இந்த சம்பவம் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காஸ்மா கார்டனை சேர்ந்த பிரசாத் (20) என்பதும், கோவை சுங்கம் ரோடு ஸ்ரீ நகர் முதல் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஸ்வினி (20) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : Gold Rate Today : அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்க விலை..அடேங்கப்பா.! இவ்வளவு தானா ?

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!