போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த கணவன்.. இரவெல்லாம் அடித்து கொலை..?? கதறும் மனைவி.

Published : May 03, 2022, 01:23 PM IST
போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த கணவன்.. இரவெல்லாம் அடித்து கொலை..?? கதறும் மனைவி.

சுருக்கம்

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த கனவனை அடித்து கொன்று விட்டதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதே சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த கனவனை அடித்து கொன்று விட்டதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதே சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை இராயப்பேட்டை சேர்ந்தவர் கலா (47)  கணவர் ராஜு  என்பவர் குடிபோதைக்கு அடிமையானவர் ஆவார். இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு  மனைவியுடன் சென்ற ராஜு அங்கு மது அருந்திய நிலையில் மீண்டும் நேற்று மனைவி கலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். அதனைத் தொடர்ந்து மனைவி கலா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து ராயப்பேட்டையில் உள்ள  " மெட்ராஸ் கேர் சென்டர் " என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டுக்கே வந்து ராஜுவை கூட்டிச் சென்றனர், போதைக்கு அடிமையான  தனது கணவன் ராஜிவை குடிநோயிலிருந்து குணமாக்கி ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கோரினர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ராஜி உயிரிழந்துவிட்டதாக மறுவாழ்வு மையத்திலிருந்து தகவல் வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கலா மற்றும் குடும்பத்தார் அங்கு சென்று பார்த்தபோது ராஜுவின் உடலில் பலத்த ரத்த காயங்கள் இருந்தது தெரிந்தது. அவரது பற்கல் உடைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரற்று கிடந்தார். தொடர்ந்து தன் கணவனுக்கு என்ன நடந்தது என கேட்டு கலா மற்றும் அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொறுப்பில் இருந்த கார்த்திக் என்பவரை கலாவின் குடும்பத்தினர் தாக்கினர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ராஜீவின் குடும்பத்தாரை சமாதானப்படுத்தி,  ராஜீவின் பிரேதத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜுவின் மனைவி கலா இதுகுறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மதுபோதைக்கு அடிமையான தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய ராஜூவின் சகோதரி மாரியம்மாள், குடிப்பழக்கத்துக்கு அடிமையான தனது சகோதரனை திருத்துவதற்கு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பினோம். ஆனால் அங்கு அவரது உயிரை வாங்கி விட்டார்கள், இரவெல்லாம் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக மையங்கள் செயல்பட வேண்டுமே தவிர அடித்து துன்புறுத்தி, கொலை செய்வதற்காக அல்ல என அவர் வேதனை தெரிவித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?