பீகாரை சேர்ந்த தம்பதி கேரளா மாநிலம் அலுவா மாவட்டம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சிறுமி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் திடீரென மாயமானார்.
கேரளாவில் 5-வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்த தம்பதி கேரளா மாநிலம் அலுவா மாவட்டம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சிறுமி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுததியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுமியை பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அழைத்து செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அப்போது அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் சிறுமி எங்கே என்பது குறித்து விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது
இதனிடையே, ஆலுவா சந்தையின் பின்புறத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் மூட்டை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தபோது காணாமல் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறுதியில் காணாமல் போன சிறுமி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் இருந்துள்ளது. இறுதியில் கைது செய்யப்பட்ட ஆசப் ஆலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 5 வயது சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.