தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கால் சென்டரில் பணிபுரியும் பெண்கள் பணி முடிந்ததும் 7 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திருச்செந்தூரில் மது போதையில் லோடு வேனை திருடி சென்று எதிரே வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கால் சென்டரில் பணிபுரியும் பெண்கள் பணி முடிந்ததும் 7 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கார் குமாரபுரம் அருகே வந்தபோது, எதிரே திருநெல்வேலி சாலையில் அரசு மதுபான கடை அருகே சிமெண்ட் விற்பனை செய்யும் கடை முன்பு நிறுத்தப்பட்ட லோடு வேனை போதை ஆசாமி திருடி சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்..!
போதை ஆசாமி ஓட்டிச் சென்ற இந்த லோடு வேன் கார் மீது மோதியது. இதில் காரில் வந்த டிரைவர் உட்பட 7 பெண்கள் மற்றும் போதை ஆசாமி ஆகியோர். காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சீதாலட்சுமி என்பவரை போதை ஆசாமி தாக்கியுள்ளார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மது போதையில் கிடந்த அந்த போதை ஆசாமி பொதுமக்களிடம் தகாத வார்த்தையால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி நினைக்கும் போதெல்லாம் இளம்பெண்ணுடன் உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்
மது போதையில் காரை திருடி சென்று விபத்தை ஏற்படுத்தி விட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியாளரை தாக்கி விட்டு, மருத்துவமனை வளாகத்தில் அசால்டாக அமர்ந்து பொதுமக்கள் மத்தியில் கையில் குட்கா புகையிலை வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.