விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்க மாட்டயா !! தந்தையைக் கொளுத்திய மகன் !!

Published : Jan 10, 2019, 10:35 AM IST
விஸ்வாசம் படம் பார்க்க பணம் கொடுக்க மாட்டயா !!   தந்தையைக் கொளுத்திய மகன் !!

சுருக்கம்

நேற்று நள்ளிரவு நடிகர் அஜித் நடித்து  வெளியான விஸ்வாசம் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு பணம் தர மறுத்ததால் காட்பாடி அருகே பெற்ற தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய 2 படங்கள் இன்று வெளியாகி உள்ளது.

இதனால், படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் 2 நடிகர்களின் ரசிகர்களாலும் கொடி, தோரணம், கட் அவுட்கள், பால் அபிஷேகம் என்று களை கட்டி உள்ளன. பட்டாசுகளை வெடித்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்  வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் புது தெருவை சேர்ந்த அஜித்குமார் என்பவர் நேற்று  நள்ளிரவு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தைப் பார்ப்ப வேண்டும் என்றும் அதற்கு பணம் வேண்டும் என்றும் தனது தந்தையிடம்  கேட்டுள்ளார்.

ஆனால் அஜித்குமாரின்   தந்தை தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டார்.

இதையடுத்து  பாண்டியன் 40% சதவீதம் தீக்காயத்துடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பி ஓடிய அஜித் குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

PREV
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்