திருவாரூரில் ஒருதலை காதலுக்கு இடையூறாக இருந்த ஜமாத் செயலாளர் படுகொலை

By Velmurugan s  |  First Published Aug 29, 2023, 12:00 PM IST

திருவாரூர் அருகே ஒருதலைக் காதலுக்கு இடையூறாக இருந்த ஜமாத் செயலாளர் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலையம் அத்திக்கடையைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 58). அதிமுகவைச் சேர்ந்தவர். மேலும் இவர் அத்திக்கடை ஜமாத் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (32). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சிராஜூதீனின் உறவினரின் பெண் ஒருவரை முகமது அசாருதீன் ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். திருமணமான நிலையில் வேறொரு பெண்ணை காதலிக்கிறாரே என்றுகூறி அதனை சிராஜூதீன் தட்டி கேட்டுள்ளார். 

தனது காதலுக்கு இடையூறாக இருக்கிறார் என சிராஜூதீன் மீது அசாருதீன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். எப்படியாவது சிராஜூதீனை கொலை செய்து விட வேண்டும் என திட்டம் தீட்டிய அசாருதீன், நேற்று நல்லிரவு கடைவீதி பகுதியில் மறைந்திருந்துள்ளார். அப்போது கடை வீதியில் இருந்து வீட்டுக்கு வந்த சிராஜூதீனை வழிமறித்து கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார். 

Latest Videos

undefined

எங்கள் மருத்துவமனையை குறைசொல்வதா? கேரளா மருத்துவமனைக்கு எதிராக அமைச்சர் ஆவேசம்

இதில் நிலைகுலைந்த சிராஜூதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது சிராஜூதீனை கொலை செய்துவிட்டு முகமது அசாருதீன் கையில் கத்தியை எடுத்துக்கொண்டு சாவகாசமாக நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

கள்ளக்காதல் விவகாரத்தில் மோதலை தடுக்கச்சென்ற கர்ப்பிணியின் கணவர் படுகொலை; காவல்துறை விசாரணை

இது தொடர்பாக சிராஜூதீனின் மகன் ரியாவுதீன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொரடாச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர்‌. கொலை செய்யப்பட்ட சிராஜூதீனின் உடல் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!