பாஜக தலைவருக்கு வாட்ஸ் அப் காலில் பெண்ணின் நிர்வாண வீடியோ.! பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்- நடந்து என்ன.?

By Ajmal Khan  |  First Published Aug 28, 2023, 1:47 PM IST

 வாட்ஸ் அப் வீடியோ காலில் பெண் ஒருவர் நிர்வாணமாக பேசுவது போன்று சித்தரித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனை மிரட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 


வாட்ஸ் அப் கால் மோசடி

நவீன யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி திறமையாக முன்னேறுபவர்களும் உண்டு. தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தி ஏமாற்றுபவர்களும் உண்டு. அந்த வகையில்  வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் அழைப்பு வரும். அதை அட்டென்ட் செய்தால் எதிர்முனையில் பெண் ஒருவர் பேசிக் கொண்டே தனது உடைகளை வீடியோ அவிழ்க்கும் வகையில் வீடியோ ஓடும். இதனை நாம் சுதாரித்துக் கொண்டு போனை கட் செய்வதற்குள் நமக்கு வாட்ஸ் அப்பில் பெண்ணுடன் நிர்வாணமாக பேசியது போன்ற வீடியோ அனுப்புவார்கள். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் நீங்கள் பணம் தரவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டுவார்கள். 

Latest Videos

பாஜக தலைவருக்கு நிர்வாண வீடியோ கால்

இதனால் தங்கள் பெயர் கெட்டுவிடுமோ என்ற அதிர்ச்சியில் பணம் கொடுத்து ஏமாறுவார்கள். அடுத்த ஒரு சில தினங்களில் மீண்டும் பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பல் கடைசி பணம் இருக்கும் வரை பணத்தை பறிக்காமல் விடமாட்டார்கள். ஒரு சிலர் அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் நடைபெறுவதுண்டு. அந்த வகையில், சாதாரண மக்களை குறிவைத்து நடந்த இந்த மோசடி கடந்த சில வாரங்களாக பெரிய பதவிகளில் உள்ளவர்களை சுற்றி வளைக்க ஆரம்பித்து விட்டது.  

புதுச்சேரி பாஜக மாநில தலைவராக இருப்பவர் சாமி கண்ணு, இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக whatsapp வீடியோ கால் வந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தவருக்கு பெண் நிர்வாணமாக  இருந்துள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே அந்த இணைப்பை துண்டித்தவுடன் வீடியோ காலில் பெண்ணுடன் பேசியது போன்று ஸ்க்ரீன்ஷாட்டை  அனுப்பி பணம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் எந்த ஊரில் இருந்து இந்த தொலைபேசி அழைப்பு வந்தது என விசாரித்ததில் ராஜஸ்தானில் இருந்து அழைப்பு வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சைபர் கிரைம் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போன்ற சம்பவம் கடந்த மாதம் தமிழகத்தை சேர்ந்த  திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் நடைபெற்றுள்ளது அவரும் இதே போல பயத்தில் வட மாநில கும்பலுக்கு பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார். இதனை அடுத்து உஷார் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அந்த வட மாநில கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்

நான் முழுசா திருப்தி அடையவில்லை.. காசை திருப்பிக்கொடு.. 2 முறை உறவில் இருந்துவிட்டு பெண்ணை தாக்கிய கொடூரன்!

click me!