
இறந்த அந்த 24 வயதான தேவா எஸ் என்ற அந்த பெண், கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், மேலும் இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவரான அவரது காதலர், கொல்லத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவா என்ற அந்த இளம் பெண் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக வைஷ்ணவ் சந்தேகப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று மாலை 4 மணி முதல் 4:30 மணிக்குள் தேவாவின் தலையில், குக்கரால் மூன்று முறை பலமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த காதலன், குக்கரில் இருந்த சாதத்தை கீழே கொட்டிவிட்டு, அதன் பிறகு அந்த குக்கரால், படுக்கையறையில் இருந்த அந்த இளம்பெண்ணை கொடூரமாக மூன்று முறை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த தேவா என்ற அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி கிருஷ்ணா, அந்த பெண்ணின் அலைபேசிக்கு பலமுறை அழைத்தும் அவர் அதை எடுக்காத நிலையில், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சோதித்துப்பார்த்தபோது, அவர் இறந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது.
இறந்த பெண்ணின் சகோதரி கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த காதலன் வைஷ்ணவ் என்பவர், அவரது காதலியான தேவா எப்பொழுதும் தனது போனை பயன்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், அடிக்கடி யாருக்காவது மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பதாகவும் குற்றம் சாட்டினார் என்றும். அதன் பிறகு அவர்களை சமாதானப்படுத்தி மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாவும் கூறியுள்ளார்.
அதன் பிறகு ஆண்டு மாலை அந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது, கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தேவாவை கொலை செய்ததை வைஷ்ணவ் ஒப்புக்கொண்டதாக பேகூர் போலீசார் தெரிவித்தனர். இறந்த பெண் தேவாவை தான் பல முறை எச்சரித்தும் அவர் வேறு ஒருவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றவாளி கூறியுள்ளார்.
வைஷ்ணவ் மற்றும் தேவா ஆகிய இருவரும் தங்களுக்கு இருந்த பொதுவான நண்பர்கள் மூலம் கேரளாவில் சந்தித்து நட்பாகியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து, ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் ஷேர் மார்க்கெட் டிரேடிங் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு சென்றுள்ளனர்.
பூ பறிக்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கர்ப்பத்தால் பிடிபட்ட முதியவர்