அரியலூர் மாவட்டத்தில் பூ பறிக்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி(வயது 60). விவசாயக் கூலி தொழிலாளி. இவர், பூப்பறிக்க வேலைக்கு வரும் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கூறுப்படுகிறது. மேலும் இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அவரை காந்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியில் சொன்னால் பலரிடமும் உன்னை பற்றி தவறாகக் கூறி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
மோடி தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் - சீமான் ஆவேசம்
மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் சுமதி விசாரணை நடத்தி, காந்தி மீது வழக்குப்பதிவு செய்து காந்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார். பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.