வயதான தாயை தெருவில் இழுத்துச் சென்ற மகன்: உ.பி.-யில் கொடூரம்!

By Manikanda Prabu  |  First Published Aug 27, 2023, 8:07 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வயதான தாயை அவரது மகன் கொடூரமாக தெருவில் இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக அனைத்து துன்பங்களையும், துக்கங்களையும் தாங்குகிறார்கள். இருப்பினும், அந்தக் குழந்தைகளே அவர்களைத் துன்புறுத்தும் போது அவர்கள் அடையும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அருகே குஹார் கிஷன்பூர் பரால் கிராமத்தில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வயதான தாயை அவரது மகன் தெருவில் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 9 மாதங்கள் தன் மகனை வயிற்றில் சுமந்து பிரசவித்த தாயை இதுபோன்று  கொடுமைப்படுத்துவது வெட்கக்கேடானது என அந்த வீடியோவை காணும் பலரும் கண்டனக் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் வயதான அந்த தாய் தனது மகனிடம் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சுகிறார். சில கிராம மக்கள் அந்த இளைஞனைத் தடுக்க முயல்கின்றனர். ஆனாலும், இரக்கமற்ற அந்த மகன் எதையும் கண்டுகொள்ளாமல் தனது தாயை துன்பப்படுத்தும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

நிறைமாத கர்ப்பிணியைப் பெத்தவங்களே கொன்ற கொடுமை! பொய் சாட்சி சொல்ல மறுத்ததால் நடந்த வெறிச்செயல்!

இதைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, காவல்துறையினரின் பார்வைக்கும் இந்த சம்பவம் சென்றுள்ளது. இது தொடர்பாக விசாரணையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஷிவ்தத் கூறுகையில், அந்த வீடியோ பழமையானது. இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்க விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

click me!