மகாராஷ்டிராவின், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆடு மற்றும் சில புறாக்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட நான்கு தலித் ஆண்களை, மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு சுமார் ஆறு நபர்களால், அவர்களை தடிகளால் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று, போலீசார் இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர் என்று அகமதுநகர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம்பூர் தாலுகாவில் உள்ள ஹரேகான் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்தச் சம்பவத்தை மனிதநேயத்தின் மீதான கறை என்றும், பாஜகவால் பரப்பப்படும் "வெறுப்பு" என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறைமாத கர்ப்பிணியைப் பெத்தவங்களே கொன்ற கொடுமை! பொய் சாட்சி சொல்ல மறுத்ததால் நடந்த வெறிச்செயல்!
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அன்று, சம்வபம் நடந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று, 20 வயதுடைய நான்கு தலித் இளைஞர்களை, அவர்களது வீடுகளுக்குச் சென்று, தங்களுடன் வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அந்த நான்கு இளைஞர்களும் ஆடு மற்றும் சில புறாக்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அவர்கள் நான்கு பெரும் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு, கட்டைகளால் தாக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யுவராஜ் கலண்டே, மனோஜ் போடகே, பப்பு பார்கே, தீபக் கெய்க்வாட், துர்கேஷ் வைத்யா மற்றும் ராஜு போரேஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அந்த கொடூர தாக்குதலின் வீடியோவை படம்பிடித்ததாகக் கூறப்படுகிறது, அது பின்னர் சமூக ஊடகங்களில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும், பாதிக்கப்பட்ட நபரின் ஷுபம் மகடே காவல்துறையில் புகார் அளித்ததாவும் கூறப்படுகிறது.
307 (கொலை முயற்சி), 364 (கடத்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் அந்த 6 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வயதான தாயை தெருவில் இழுத்துச் சென்ற மகன்: உ.பி.-யில் கொடூரம்!