கள்ளக்காதல் விவகாரத்தில் மோதலை தடுக்கச்சென்ற கர்ப்பிணியின் கணவர் படுகொலை; காவல்துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Aug 29, 2023, 9:30 AM IST

தேனி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இருதரப்பினரிடையேயான மோதலை தடுக்கச் சென்ற நபர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா (வயது 33). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து(36). மருதமுத்துவின் மனைவி வீரலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24)என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததால் மருதமுத்து குடும்பத்தாருக்கும், பிரவீன் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இருந்த போதும் வீரலட்சுமிக்கும் பிரவீனுக்கும் இடையேயான தொடர்பு நீடித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

நாடு முழுவதும் விடியலை அளிப்போம் என கூறும் முதல்வர் முதலில் காவிரி நீரை பெற்று தரட்டும் - தமிழிசை கிண்டல்

இதனால் ஆத்திரமடைந்த மருதமுத்து பிரவீனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன், உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில்  டொம்புச்சேரி சமுதாயக்கூடம் அருகே இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருதுமுத்து பிரவீனை கத்தியால் குத்த முன்றுள்ளார். இதனை மருதமுத்துவின் தம்பி ராஜா தடுத்துள்ளார். இந்த நிலையில் அருகில் உள்ள தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த பிரவீன்,  மருதமுத்துவை குத்த முயன்றுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரவீனின் மைத்துனர் தினேஷ்குமார்(26) என்பவரும் மருதமுத்துவை குத்த முன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக இதனை தடுக்க வந்த ராஜாவை இருவரும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து பிரவீன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த ராஜாவை உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெளிநாட்டில் காட்டுக்குள் வீடியோ எடுக்க சென்ற தமிழக மருத்து மாணவன் திடீர் மாயம்..! மீட்க கோரி உறவினர்கள் கதறல்

உயிரிழந்த ராஜாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மருதமுத்து  பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பிரவீனை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம்  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான தினேஷ்குமார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

உயிரிழந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறை விலக்கச் சென்ற இளைஞர் கத்திக்குத்து பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!