மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் பழிக்கு பழியாக வெட்டி படுகொலை

Published : Jul 17, 2023, 04:10 PM IST
மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் பழிக்கு பழியாக வெட்டி படுகொலை

சுருக்கம்

மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மாவூத்து பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக அதிமுக கவுன்சிலராக தொடர்ந்து வெற்றி பெற்று பொறுப்பு வகித்து வந்தார். 

இவர் லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரை பாலமேடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்த கும்பல் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது.

காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் முத்துசாமி

இதனால் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பாலமேடு காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!