மகளின் கள்ளக்காதல்..! அநியாயமாக பறிபோன தந்தையின் உயிர்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Jul 16, 2023, 2:08 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே உள்ள கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(56). கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுபாஷினி (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. 
 


மகளின் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தப்பட்ட  தந்தை உயிரிழந்ததை அடுத்துது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே உள்ள கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(56). கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுபாஷினி (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே சுபாஷினி, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் சுபாஷினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதனிடையே, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்ந்த சுபாஷினி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சுபாஷினி பெற்றோர் வீட்டுக்கு வந்ததை எப்படியோ அறிந்த வெற்றி அங்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுபாஷினியின் தந்தை சுப்பிரமணியிடம் தனது காதலி எங்கே? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த வெற்றி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று காலை உயிரிழந்ததை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!