கள்ளக் காதலுக்காக குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற அபிராமி !! சிறைக்குள் என்ன செய்தார் தெரியுமா ? அதிர்ச்சி தகவல் !!

Published : Oct 08, 2018, 10:04 AM IST
கள்ளக் காதலுக்காக குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற அபிராமி !! சிறைக்குள் என்ன செய்தார் தெரியுமா ? அதிர்ச்சி தகவல் !!

சுருக்கம்

கள்ளக்காதலனுடன் ஓடிப் போவதற்காக தான் பெற்ற குழந்தைகக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நீதிமன்றத்துக்கு  கள்ளக் காதலனுடன் ஒரே வேனில் அழைத்துச் சென்றபோது தன்னை சுந்தரம்  திருப்பிக்கூட பார்க்காததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனஜெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார். இதையடுத்து அவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக் காதலன் சுந்தமும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம்  அவர்கள் இருவரையும் விசாரணைக்காக சுந்தரத்துடன் ஒரே வாகனத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர், அப்போது சுந்தரம் அபிராமியின் முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை என்றும் அபிராமி தான் தொடர்ந்து கதறி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, வரும்,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் . இந்நிலையில் அபிராமி சிறையில் தனது துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார், தற்செயலாக அதைப் பார்த்துவிட்ட  சிறை வார்டன் உடனடியாக அதை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

சுந்தரத்திற்காக பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் விஷம் வைத்து கொலை செய்து விட்டதால்  குற்றவுணர்வில் தற்கொலைக்கு முயன்றராரா? அல்லது கள்ளக்காதலன் தன்னை திரும்பிக் கூட பார்க்கவில்லையே என கருதியதால் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..