
கோவை விமான நிலையம் அருகே ஜி.ஆர்.ஜி நகர் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மரியபிரதீப். இவருக்கு வயது 42. திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 16 ஆம் தேதி தனது மனைவியுடன் காரில் கொடிசியா அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
உடனே அவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் 3 திருநங்கைகள் வந்தனர். அதில் ஒருவர் மரிய பிரதீப்பின் கார் கண்ணாடியை தட்டி பணம் கேட்டனர். உடனே அவர் தனது மணிபர்சை எடுத்து அதில் இருந்து ரூ.10-ஐ எடுத்து அந்த திருநங்கையிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அந்த திருநங்கை மரிய பிரதீப்பை ஆசீர்வாதம் செய்வது போல் தலையில் கையை வைத்து சென்றார்.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?
சிறிது நேரம் கழித்து பார்த்த போது மரிய பிரதீப்பின் பர்சில் இருந்த ரூ.8 ஆயிரத்தை காணவில்லை. பிறகு பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பணத்தை திருடிய இளவஞ்சி என்ற திருநங்கையை கைது செய்தனர். இது தொடர்பாக ஆர்.ஜே மரியா வெளியிட்டுள்ள பதிவில் இதுகுறித்து கூறி உள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..20 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு.. கலக்கத்தில் அதிமுக முக்கிய புள்ளிகள் !