காதலனை கட்டிப்பிடித்து பைக்கில் ஊர் சுற்றிய மனைவி.. நேரில் பார்த்த கணவன்.. கழுத்தை நெறித்து கொலை.

By Ezhilarasan Babu  |  First Published Jul 20, 2022, 6:55 PM IST

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை கொள்ளைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. 


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை கொள்ளைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு சில நேரங்களில் கள்ளக்காதல் வரை சிலரை தள்ளி விடுகிறது, சிலர் அதிலிருந்து விடுபட முடியாமல் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் அல்லது அதற்காக எவரின் உயிரையும் பலி வாங்கவும் துணிந்து விடுகின்றனர். இந்த வரிசையில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Tap to resize

Latest Videos

முழு விவரம் பின்வருமாறு ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத், தோஹானாவைச் சேர்ந்தவர் சஞ்சய், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்கள் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. ஆனால் திடீரென கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, அதில் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். இந்நிலையில் மோனு என்கின்ற விகாஷ் என்ற இளைஞருடன் நிகிதாவுக்கு திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது. அவர் மோனுவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். 

இதையும் படியுங்கள்: அடத்தூ... அண்ணி மீது ஏற்பட்ட ஒருதலைக் காதல்... அண்ணனை தலையில் கல்லால் தாக்கி கொன்ற தம்பி.

வாய்ப்பு கிடைக்கும்போது இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அடிக்கடி  கணவனுக்க தெரியாமல் வெளியில் மோனுவுடன் சுற்றி வந்தார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சஞ்சய் இது குறித்து மனைவியிடம் விசாரித்தார். ஆனால் தனக்கு அதுபோல எவருடனும் தொடர்பு இல்லை என அவர் கூறினார், சஞ்சய் கேட்கும்போதெல்லாம் இதே பதிலைக் கூறி மழுப்பி வந்தார் நிகிதா. இந்நிலையில் மோனு  நிகிதா இருவரும் ஜூலை 15ஆம் தேதி அன்று தம்கோரா சாலையில்  கட்டி அணைத்தபடியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சஞ்சய்யிடம் மனைவி நிகிதா கள்ளக்காதலன்  மோனு கையும் களவுமாக பிடிபட்டனர்.

சஞ்சயை பார்த்ததும் மோனு அவரைத் தாக்க ஆரம்பித்தார், அத்தாக்குதலில்பலத்த காயம் அடைந்து சஞ்சய் மயங்கி விழுந்தார். அப்போது மோனுவும் நிகிதா இருவரும் சேர்ந்து சஞ்சயின் கழுத்தை நெரித்தனர் அதில் சம்பவ இடத்திலேயே மோனு உயிரிழந்தார். பின்னர் சஞ்சயின் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற இருவரும் சடலத்தை கால்வாய் கரையில் புதைக்க தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் இருந்ததால் பயந்த அவர்கள் சஞ்சையை சிலர் அடித்து கொலை செய்ததாக கூறி சஞ்சயின் சடலத்தை மருத்துவ மனைக்கு அனுப்பி கொண்டு சென்றனர். பின்னர் அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 

இதையும் படியுங்கள்: பெற்ற மகளுக்கே துரோகம்... மருமகனை வீட்டிற்கே வரவழைத்து தனி அறையில் மாமியார் உல்லாசம்... அடித்து கொலை.

தானும் மோனுவும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது  சஞ்சையை யாரோ மூன்று பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொண்றதாகவும் கூறினார். ஆனால் இருவரின் பேச்சிலும் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தங்கள் பாணியில் விசாரித்தனர், அப்போது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன் சஞ்சய் அடித்துக் கொன்றதையும் தான்தான் அவரின் மனைவி என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். 

 

click me!