போதையில் ஆணுக்கு தாலி கட்டிய ஆண்.. என்ன கருமம்டா இது.. குடிபோதையில் அட்டகாசம் !

Published : Apr 12, 2022, 05:11 PM IST
போதையில் ஆணுக்கு தாலி கட்டிய ஆண்.. என்ன கருமம்டா இது.. குடிபோதையில் அட்டகாசம் !

சுருக்கம்

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இவருக்கு மெடெக் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆட்டோ டிரைவருக்கும் மதுக்கடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எப்போது முழு போதையில் இருக்கும் இருவரும், கடந்த மார்ச் மாதத்தில்  ஜோகிநாத் குட்டா என்ற கோவிலில் தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்திருக்கிறார்கள். அன்றைய நாளன்றும் முழு போதையிலேயே இருந்திருக்கிறார்கள். திருமணத்துக்கு பின்னர் இருவரும் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இதனையடுத்து அண்மையில் ஆட்டோ டிரைவரை தேடி 21வயது இளைஞன் அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். 

அப்போதுதான் இருவருக்கும் திருமணமானது குறித்து தனது பெற்றோரிடம் அந்த டிரைவர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அந்த டிரைவரின் பெற்றோர் 21 வயது இளைஞனை வீட்டில் அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள். இதனால் ஜோகிபேட் இளைஞர் போலிஸிடம் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் இரு தரப்பினரும் சேர்ந்து பேசி பிரச்னையை முடித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. 

போலிஸ் தரப்பிலிருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் பகிரப்படாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் ஜோகிபேட்டை சேர்ந்த அந்த இளைஞன் அந்த ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து வாழ 10 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறாராம். அந்த பணத்துக்கு ஆசைப்பட்டே போதையில் இருந்த போது திருமணம் செய்திருக்கிறார்கள். போதை தெளிந்த பின்னர் உண்மை தெரிந்ததும் 1 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் வாழ முடியாது என பேசி இரு தரப்பும் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க : உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். லவ்வரின் அம்மாவை படுக்க அழைத்த காதலன் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு