உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். லவ்வரின் அம்மாவை படுக்க அழைத்த காதலன் !

Published : Apr 12, 2022, 04:35 PM IST
உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். லவ்வரின் அம்மாவை படுக்க அழைத்த காதலன் !

சுருக்கம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன் மூலம் கூறியுள்ளான்.

மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படி மாணவியிடம் கூறி உள்ளான். அதன் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி அவன் தங்கிருந்த அறைக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது கோகுல் தான் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டி உள்ளான்.

இதனைத் தொடர்ந்து கோகுல் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இருவரும் உல்லாசமாக இருந்ததை கோகுல் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். இந்நிலையில் கோகுல் மாணவி இடையேயான காதல் விவகாரம், மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் இருவரையும் கண்டித்துள்ளார்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் கோகுல், மாணவியின் தாயிடம் இணையதளத்தில் படங்களை பகிராமல் இருக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும், என்னுடன் நீங்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் கோகுல் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 3 லட்சத்துக்கும் மேல் காலி பணியிடங்கள் இருக்கு.. TNPSC தேர்வு பற்றி அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!