டியூசனுக்கு படிக்க வந்த 10 வயது சிறுமிக்கு ‘பாலியல்’ தொல்லை கொடுத்த 65 வயது கிழவன்.. துரத்தும் போலீஸ்

Published : Jan 09, 2023, 10:19 PM IST
டியூசனுக்கு படிக்க வந்த 10 வயது சிறுமிக்கு ‘பாலியல்’ தொல்லை கொடுத்த 65 வயது கிழவன்.. துரத்தும் போலீஸ்

சுருக்கம்

10 வயது சிறுமிக்கு 65 வயதான முதியவர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் வசித்து வருபவர் சீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவரது 10 வயதுடைய மகள் அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

வழக்கம் போல கடந்த 3 ஆம் தேதியன்று மாலையில் டியுஷனுக்கு 5 ஆம் வகுப்பு மாணவி சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த போது சீறுநீர் கழிக்க அந்த வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டியுஷன் வாத்தியாரின்  தந்தை தீயணைப்புத் துறையில் இருந்து ஒய்வு பெற்ற தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயிடம் நடந்ததை கூறினார்.

இதையும் படிங்க..TN Assembly 2023 : உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..தமிழகத்தின் தலைமகன் பொய் சொல்ல முடியுமா? எல்லாமே அவங்க நாடகம்.! திமுகவை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!