கணவனுக்கு ஆண்மை குறைபாடு.. அத்துமீறிய கணவனின் அண்ணன் - வீட்டில் தனியாக கதறிய பெண்!

மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் அண்ணன் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம், திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்த சத்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ. 5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர். மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

Latest Videos

இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!

இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்தனம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ. 10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டினார்கள். இதற்கு நான் மறுத்தேன். எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள்.

எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!

இதையும் படிங்க..ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

click me!