தந்தையின் குடிப்பழக்கம்.. வாலிபர்கள் வாங்கி கொடுத்த செல்போன்.. 9ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை

Published : Sep 24, 2022, 07:26 PM IST
தந்தையின் குடிப்பழக்கம்.. வாலிபர்கள் வாங்கி கொடுத்த செல்போன்.. 9ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை

சுருக்கம்

மரக்காணம் அருகே பெண்ணின் தந்தைக்கு சாராயம் கொடுத்து மாணவியை 2 வாலிபர்கள் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தவர் 14 வயது மாணவி. இந்த மாணவியின் தாய் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தந்தை மற்றும் தம்பியுடன் குடிசை வீட்டில் மாணவி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் மாணவி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். 

இதைப் பார்த்த மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்து, காவல்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார். பிறகு மரக்காணம் போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவியின் இறப்புக்கான காரணங்கள் குறித்து ஏதாவது தடயங்கள் சிக்குமா ? என்று போலீசார் மாணவியின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது ஒரு செல்போன் கிடைத்துள்ளது.

பெண்ணின் தந்தை வாங்கிக் கொடுக்காத நிலையில், மாணவிக்கு செல்போன் கிடைத்தது எப்படி ? என்று விசாரணையில் போலீசார் இறங்கினர். அந்த செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை வைத்து விசாரித்தபோது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்களுடையது என்பது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.  அவர்களை விசாரித்தபோது அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..ஒரு நாளுக்கு 102 கோடி.! அதானி அண்ணண் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா..! வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, ‘2 வாலிபர்களுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். மாணவிக்கு தாய் இல்லாததால் அவரது தந்தையும் கண்டுகொள்ளவில்லை. மாணவியின் தந்தைக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த அந்த வாலிபர்கள், மாணவியை சந்திக்க வரும்போதெல்லாம் சாராய பாக்கெட்டுகள் வாங்கி வந்து அவருக்கு கொடுப்பார்கள்.

மேலும் செய்திகளுக்கு..மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? பாஜகவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !

அதை குடித்துவிட்டு போதையில் அவர் மயங்கிவிடுவார். இதையடுத்து அந்த வாலிபர்கள் மாணவியிடம் வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்துள்ளனர். கடந்த 2 மாதமாக இது அரங்கேறி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு அவர்கள் செல்போன் வாங்கி கொடுத்து, அதன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் அந்த வாலிபர்கள் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்தனர். மாணவியின் வீட்டுக்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வதை அறிந்த கிராம மக்கள் அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர். 

இதனால் அவமானம் அடைந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!