சென்னை மதுரவாயல் பகுதியில் உடன் பிறந்த தம்பியை அடித்த 8ம் வகுப்பு மாணவி அம்மா தன்னை அடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்த சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் முருகன், புனிதா தம்பதி. முருகன் கூலி வேலை செய்து வரும் நிலையில், புனிதா அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சர்மி என்ற மகளும், கமலேஷ் என்ற மகனும் உள்ளனர்.
சர்மி அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பும், அதே பள்ளியில் புனிதா 2ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது கமலேஷ் சரியாக படிக்கவில்லை என்று சர்மி அவரை அடித்துள்ளார். மேலும் தம்பி சரியாக படிக்காததால் நான் அவனை அடித்துவிட்டேன் என்று தந்தைக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன் இன்றுமுதல் விநியோகம்; பெறுவது எப்படி?
அம்மா, அப்பா இருவரும் வேலை முடித்து வீட்டுக்கு வரும் முன்னரே இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் முருகன் வீட்டிற்கு வந்து பார்த்த போது சர்மி தனி அரையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நம்ம ஸ்கூல் திட்டத்தில் ஒரே நாளில் குவிந்த ரூ.50 கோடி; கல்வியாளர்கள் பாராட்டு
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தம்பியை அடித்த காரணத்தினால் அம்மா தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.