சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி சம்பங்கள் அரங்கேறி வந்தன. இதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடற்கரையில் இரவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியிடம் கத்தி முனையில் மிரட்டி போன்-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் காதல் ஜோடிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி சம்பங்கள் அரங்கேறி வந்தன. இதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் 40,000 ரூபாய் வழிப்பறி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க;- 13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது உசேன் (25). தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் அருகே உள்ள கடற்கரையில், தனது காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களது செல்போனை பிடுங்கி போன்-பே மூலம் ரூ.40 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக முகமது உசேன் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஊசி உதயா (எ) உதயகுமார் (25), விக்கி (எ) விக்னேஷ் (27) ஆகிய 2 பேர் தங்களது கூட்டாளியுடன் சேர்ந்து, பணம் பறித்தது தெரிந்தது. அவர்களை நேற்று பிடித்து விசாரித்தனர். அதில், 2 பேர் மீதும் பள்ளிக்கரணை மற்றும் நீலாங்கரை காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!