கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை அடுத்த ஹாக்லி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் முத்தப்பா எல்லப்பா மற்றும் கீதா என்பவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த மாணவனை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு ஆசிரியர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை அடுத்த ஹாக்லி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் முத்தப்பா எல்லப்பா மற்றும் கீதா என்பவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இந்த இரு ஆசிரியர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி துவங்கிய நிலையில் இருவரும் பள்ளி முதல் மாடியில் வழக்கம் போல இருவரும் சண்டையிட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் இரண்டு சகோதரர்களை கரெக்ட் செய்த இளம்பெண்.. எதிர்த்த தந்தை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்போது ஆசிரியர் முத்தப்பா, ஆசிரியை கீதாவை அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து தாக்க முயன்றுள்ளார். இதனை கண்ட கீதாவின் மகன் பரத் ஆசிரியர் முத்தப்பாவை தடுக்க முயற்சித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்தப்பா பரத்தை முதல் மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில், படுகாயமடைந்த பரத் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கீதாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி ஆசிரியர் மாணவனை முதல் மாடியில் தூக்கி வீசி கொலை செய்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- மனைவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஜோடி மாறி உடலுறவு செய்ய சொல்லி டார்ச்சர்.. சைகோ கணவர் மீது புகார்.