தனியா ரூம்ல நீ மட்டும் தான் இருக்க.. வாட்ஸ் அப் வீடியோ கால்ல டிரஸ்ஸை கழற்றி காட்டுறியா கேட்ட மாணவன் அரெஸ்ட்.!

By vinoth kumar  |  First Published Dec 20, 2022, 9:18 AM IST

சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). இவர் ஆர். கே. நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ. படித்து வருகிறார். இவருக்கும் பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.


நட்பாக பழகி வந்த கல்லூரி மாணவியிடம் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனை போலீசார் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். 

சென்னை திருவொற்றியூர் எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). இவர் ஆர். கே. நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ. படித்து வருகிறார். இவருக்கும் பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனையடுத்து, நாளடைவில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி வாட்ஸ்அப் சாட்டிங் மற்றும் வீடியோ காலில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- வகுப்பறையில் முனகல் சத்தம்.. எட்டிப்பார்த்த மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

நட்பாக பழகி வந்த பரத் நாளடைவில் அவரது பேச்சில் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அந்த மாணவி அறிந்தார். அடிக்கடி வீடியோ கால் செய்ய சொல்லி சொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு கல்லூரி மாணவன் பரத் இந்த மாணவிக்கு வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசியதோடு, அவரது உடையை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியில் இணைப்பை துண்டித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அந்த மாணவிக்கு பரத் போன் செய்து, தொல்லை கொடுத்துள்ளார். 

 இதனால், பொறுமை இழந்த மாணவி சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.  இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பரத்தினுடைய தொலைபேசியை பார்க்கும் போது பல பெண்களிடம் இது போல் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவது,  ஆபாச சாட்டிங்  செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க;- ஓயாமல் மாணவனுக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்! டிஸ்மிஸ் ஆன பள்ளி ஆசிரியர்! அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு.!

click me!