கருமம் கருமம்.. 13 வயது பேத்தியை 3 மாதங்களாக விடாமல் பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய 64 வயது தாத்தா..!

Published : Feb 01, 2022, 08:19 AM IST
கருமம் கருமம்.. 13 வயது பேத்தியை 3 மாதங்களாக விடாமல் பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய 64 வயது தாத்தா..!

சுருக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியைச் சேர்ந்த  ராசு(64). கூலி தொழிலாளி. இவர்13 வயது பேத்தியை மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அடித்து மிரட்டியுள்ளார். 

மானாமதுரையில் 13 வயது பேத்தியை 3 மாதங்களாக விடாமல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாத்தாவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பட்டத்தரசி பகுதியைச் சேர்ந்த  ராசு(64). கூலி தொழிலாளி. இவர்13 வயது பேத்தியை மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அடித்து மிரட்டியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது, கதறிய படியே தாத்தா ராசு மிரட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பேத்தியை கர்ப்பமாக்கிய ராசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..