உல்லாசத்துக்காக கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி.. வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

Published : Jan 31, 2022, 07:52 AM ISTUpdated : Jan 31, 2022, 08:35 AM IST
உல்லாசத்துக்காக கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி.. வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

 இனி குழந்தைகளை நான் எப்படி காப்பாற்றுவேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில்;- ஜூவா மூச்சு திணறடித்து  கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

சேலத்தில்  தலையணையால் முகத்தில் அழுத்தி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்நதவர் ஜூவா(29), அவரது மனைவி கவிதா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆசாரியான ஜூவா கடந்த 16ம் தேதி வீட்டில் திடீரென உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜூவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி விசாரணை நடத்தினர். அப்போது, பொங்கல் பண்டிகையின் போது மதுபாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டே இருந்தார். இதனால், அவர் உயிரிழந்துவிட்டார். இனி குழந்தைகளை நான் எப்படி காப்பாற்றுவேன் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில்;- ஜூவா மூச்சு திணறடித்து  கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த சில நாட்களாக மனைவி கவிதாவை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அவர் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். அவர் யாரிடம் பேசினார்? என்பதை போலீசார் கண்காணித்த நிலையில் அன்னதானப் பட்டியை  சேர்ந்த ராஜா(39)  என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கவிதாவையும்  ராஜாவையும் பிடித்து விசாரித்தனர். இதில், இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் கிடுக்கிப்படி விசாரணையில் இருவரும் சேர்ந்து ஜூவாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதனை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியதாகவும் கவிதா வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்த ஜூவாவை தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக கவிதா, ராஜா இருவரும் கூறியுள்ளனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!