
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயது. இந்த தம்பதியினருக்கு 22 வயது மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலைக்காக சென்றுவிட்டார்.
மகன்களின் படிப்புக்காக தங்கள் கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியிருந்தனர். பெண்ணின் மூத்த மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு சென்று வருகிறார். இளைய மகன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..“நள்ளிரவில் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்”.. இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !
மகன்கள் இருவரும் வேலை, படிப்புக்காக தினமும் பகல் பொழுது முழுவதும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவதால் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண் பேஸ்புக் மூலம் பல்வேறு நண்பர்களுடன் தனது நேரத்தை செலவிட தொடங்கினார் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் பேஸ்புக்கில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். தன்னை வித, விதமாக அலங்கரித்துக்கொண்டு கவர்ச்சியாக படம் பிடித்து அதை அந்த வாலிபருக்கு அந்த பெண் அனுப்பி வைத்துள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் முகநூல் மூலமே பேசிக்கொள்வது. உன்னை உடனடியாக நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணியும் பச்சைக்கொடி காட்ட அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்த வாலிபர் தனது சொந்த ஊரில் இருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஒரத்தநாட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த அந்த வாலிபர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்துள்ளார். கணவர் வெளிநாட்டில் இருந்ததும், மகன்கள் இருவரும் வீட்டில் இல்லாததும் அந்த பெண்ணுக்கு மிகுந்த சவுகரியமாக போய் விட்டது.
வாலிபர் ஓட்டி வந்த ஆட்டோவில் இருவரும் ஒரத்தநாட்டில் இருந்து தொலைதூரத்திற்கு சென்று அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கள்ளக்காதலை மறைத்த தன்னால் தனது வயிற்றில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் சென்று குடும்பம் நடத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
தனது மகன்களுக்கு விவரம் தெரியும் முன்பாகவே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த அந்த பெண், தனது கணவர் வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி அனுப்பி வைத்த பணத்தில் வாங்கிய நகைகள் மற்றும் பணத்துடன் கடந்த 12-ந் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் மாயமானார். இந்த நிலையில் காலையில் எழுந்த அந்த பெண்ணின் மகன்கள் வீட்டில் தனது தாயாரை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெளிநாட்டில் உள்ள தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அந்த பெண்ணின் மூத்த மகன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார்.அந்த புகாரில், தனது தாயார் வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாகவும், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும் காணவில்லை என்றும் அதில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் அதனுடன் சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் வெளிநாட்டில் உள்ள தனது முதல் கணவருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருடன் குடும்பம் நடத்த உள்ளதாகவும்அதில் கூறியிருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்