அதிர்ச்சி!! 16 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. கர்ப்பதை கலைப்பதாக கூறி மந்திரவாதி அத்துமீறல்..

Published : Oct 01, 2022, 03:02 PM IST
அதிர்ச்சி!! 16 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. கர்ப்பதை கலைப்பதாக கூறி மந்திரவாதி அத்துமீறல்..

சுருக்கம்

கோவை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் தேடி வருகின்றனர். 

பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும், திருப்பூர் மாட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ் (20) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் சிறுமியை இளைஞன் விக்னேஷ் தனது நண்பர் ஈஸ்வரன் உதவியுடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. 

அப்போது சிறுமிக்கு திருமணம் ஆசைக் காட்டி விக்னேஷ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து விக்னேஷ் தனது உறுவினர் சின்னசாமி என்பவரிடம் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு அழைத்துச் சென்றுள்ளார். 

மேலும் படிக்க:2 வது கணவனுடன் உல்லாசமாக இருக்க தாய் செய்த காரியம்.. குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை

இதனையடுத்து சின்னசாமி மருத்துவரிடம் அழைத்து செல்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, மந்திரவாதி அர்ஜூனன் (60) என்பவரிடம் அழைத்துச்சென்றுள்ளான்.

மந்திரவாதியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து 2 வாரத்திற்கு பின் வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்னேஷின் தாத்தா சின்னசாமி, மந்திரவாதி அர்ஜூனன், நண்பன் ஈஸ்வரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க:மனைவி, மாமியார் கண்ணெதிரே பிரபல ரவுடி கொலை.. இதுதான் காரணமா? திண்டிவனம் கோர்ட்டில் 4 பேர் சரண்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்