மனைவி வினிதா மற்றும் குழந்தைகளை பார்க்க ரவுடி சந்துரு கடந்த 26ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் உள்ள மாமியார் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, 4 இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் மனைவி, மாமியார் கண்ணெதிரே சந்துருவை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தடுத்த வினிதாவையும் அந்த கும்பல் வெட்டி விட்டு தப்பியது.
கூடுவாஞ்சேரியில் மனைவி, மாமியார் கண்ணெதிரே பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (27). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் வினிதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வருண் என்ற 5 வயதில் மகனும், சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், வினிதா தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
undefined
எனவே, மனைவி வினிதா மற்றும் குழந்தைகளை பார்க்க ரவுடி சந்துரு கடந்த 26ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் உள்ள மாமியார் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, 4 இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் மனைவி, மாமியார் கண்ணெதிரே சந்துருவை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தடுத்த வினிதாவையும் அந்த கும்பல் வெட்டி விட்டு தப்பியது.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சந்துருவை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த ரவுடி சச்சினை நேற்று முன்தினம் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகள் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த ரத்தினசபாபதி(28), விஷ்ணு(21), சக்திகுமார்(24), கோபால கண்ணன்(23) ஆகிய நான்கு பேரை திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் .இவர்களை காவலில் வைக்க நீதிபதி கமலா உத்தரவிட்டதைத் தொடர்ந்து விழுப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.