சில நாட்களில் திருமணமாக இருந்த 25 வயது பெண்ணை கற்பழித்து கொடூரக் கொலை செய்த 17 வயது காமுகன்..!

Published : Dec 27, 2018, 11:44 AM ISTUpdated : Dec 27, 2018, 11:50 AM IST
சில நாட்களில் திருமணமாக இருந்த 25 வயது பெண்ணை கற்பழித்து கொடூரக் கொலை செய்த 17 வயது காமுகன்..!

சுருக்கம்

புதுச்சேரில் தனியாக வீட்டில் இருந்த 25 வயது பெண்ணை அடித்து மயங்க வைத்து பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

புதுச்சேரில் தனியாக வீட்டில் இருந்த 25 வயது பெண்ணை அடித்து மயங்க வைத்து பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

புதுச்சேரி, குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்சபிரபா. 25 வயதான இவர் தேசிய வங்கி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், கடந்த வாரம் பூட்டிய வீட்டில் கழுத்து அறுத்து இறந்து கிடந்தார். முதலில் தற்கொலை என எண்ணிய போலீஸார், அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதி அறிந்து, தலை மற்றும் உடம்பில் இருந்த காயங்களை வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது, சந்தேகத்திற்கு உள்ளான 17 வயது சிறுவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அச்சிறுவன்தான் இந்த கொலையை செய்தான் என்பது உறுதியானது. 

அதாவது, சம்பவம் நடந்த நாளான்று சிறுவனின் புறா, அம்சபிரபா வீட்டிற்குள் பறந்து வந்ததால் அதை பிடிக்க அங்கு சென்றுள்ளான். ஆனால், அம்சபிரபா அந்த சிறுவனை திட்டியதால் ஆத்திரம் அடைந்த அவர் அம்சபிரபாவை கல்லால் அடித்துள்ளான். இதனால் அம்சபிரபா மயங்கி விழுந்ததும், வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்து, வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளான். கைது செய்யப்பட்ட சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?