கிளி ஜோசியரை பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்தவர் சென்னையில் சரண்...!

Published : Dec 26, 2018, 04:09 PM ISTUpdated : Dec 26, 2018, 04:13 PM IST
கிளி ஜோசியரை பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்தவர் சென்னையில் சரண்...!

சுருக்கம்

திருப்பூரில் கிளி ஜோதிடரை வெட்டிக் கொன்ற ரகு என்பவர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

திருப்பூரில் கிளி ஜோதிடரை வெட்டிக் கொன்ற ரகு என்பவர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

திருப்பூர் குமரன் சாலையில் சாலையோரமாக ரமேஷ் என்பவர் ஜோசியம் பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ரமேஷை சரமாரியாக அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். மேலும் அந்த மர்ம நபர் துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றார். 

அதில் கிளி ஜோசியர் ரமேஷ், பெண்களை வசியம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ரமேஷ் இந்த கொலையை செய்ததாக கூறியபடி சென்றார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். கிளி ஜோசியரை கொலை செய்தது கும்பகோணத்தைச் சேர்ந்த ரகு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூரில் கொலை செய்து விட்டு சென்னையில் உள்ள அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!