கள்ளக்காதலுக்காக கணவனை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி...!

By vinoth kumarFirst Published Dec 26, 2018, 3:24 PM IST
Highlights

அரவக்குறிச்சி அருகே கல்லால் தாக்கி கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்டபட்டுள்ளது. அவரது மனைவியும் கள்ளக்காதனும் சேர்ந்து கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

அரவக்குறிச்சி அருகே கல்லால் தாக்கி கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்டபட்டுள்ளது. அவரது மனைவியும் கள்ளக்காதனும் சேர்ந்து கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காட்டுக்குள் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் லுங்கி சட்டை அணிந்த நிலையில் தலையில் கல்லால் அடித்து ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  இறந்தவர் அரவக்குறிச்சியை அடுத்த திருக்கூரணத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் மணிகண்டன் (26) என்றும், கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி காயத்ரி (21) என்ற மனைவியும், 3 வயது குழந்தையும் உள்ளது என தெரியவந்தது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று அரவக்குறிச்சி போலீசார் தீவிரமாக விசாரித்தனர். 

இந்த கொலை தொடர்பாக மணிகண்டனின் மனைவி காயத்ரிதேவி மற்றும் 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது  காயத்ரிதேவி கள்ளக்காதலுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து காயத்ரிதேவி அளித்த வாக்குமூலத்தில் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (20) என்பவருக்கு திருமணத்திற்கு முன்பே காதல் இருந்தது. அது திருமணத்திற்கு பிறகும் கள்ளக்காதலாக தொடர்ந்தது. இதையறிந்த மணிகண்டன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மணிகண்டனை கொலை செய்ய கமலக்கண்ணன் மற்றும் காயத்ரி திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் சம்பவம் நடந்த காட்டுப்பகுதிக்கு இதுகுறித்து பேச்சுவார்த்தைக்காக மணிகண்டனை, கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரூபன் என்பவரும் வரவழைத்து மது வாங்கி கொடுத்துள்ளனர். 

பின்னர் நடந்த பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை, தலையில் கல்லை போட்டு கமலக்கண்ணன் கொன்று விட்டு நண்பர் ரூபனுடன் தப்பி ஓடிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காயத்ரிதேவிஇ கமலக்கண்ணன், ரூபன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!