திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

Published : Apr 11, 2023, 12:02 PM IST
திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

சுருக்கம்

சேலத்தில் திருமணமாகாத சிறுமி பிரசவத்துக்கு பிறகு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் பெண் மருத்துவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் மருத்துவர் செல்வாம்பாள். இவர், திருமணமாகாமல் கர்ப்பமான 17 வயது சிறுமிக்கு ஆரம்பம் முதலே சிகிச்சை அளித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு குறை பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் சிறுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரசவத்தின் போது சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் குழந்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பிறந்துள்ளது. உடனடியாக சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே சிறுமிக்கு பிறந்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டு விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

எனக்கு அரசு வேலை வேண்டும்; மது போதையில் சாலையில் படுத்து பெண் அலப்பறை

இந்த சம்பவம் தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பெண் மருத்துவர் செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ராகுலை பார்த்து மோடி பயப்படுகிறார்; 2024ல் மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் - ஜோதிமணி 

மருத்துவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெண் மருத்துவர் மோகனம்பாள் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!