இரவு நேரத்தில் தனியாக சிக்கிய திருநங்கையை 15 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் கடப்பாவில் அரங்கேறியுள்ளது.
இரவு நேரத்தில் தனியாக சிக்கிய திருநங்கையை 15 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் கடப்பாவில் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளேடுகளை திருப்பினால் கற்பழிப்பு, கள்ளக்காதல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செய்திகளே நிரம்பியிருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பாலியல் பலாத்கார செய்திகள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இளம் பெண்கள் முதல் குழந்தைகள் வரை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
பல நேரங்களில் வயதான பெண்களும் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் திருநங்கை ஒருவர் 15 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
இதையும் படியுங்கள்: எங்க வீட்டுக்கு போலாமா.. பக்கா ஸ்கெட்ச் போட்டு 16 வயது சிறுமியை சீரழித்த 2 சிறுவர்கள்
ஏற்கனவே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை, தங்கள் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை, உரிமையில்லை என அவர்கள் கதறி வரும் நிலையில், இதுபோன்ற ஒரு அட்டூழியம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்துள்ளது. அதிலும் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தொகுதியிலேயே இது நடந்துள்ளது. இதனால் இது பேசுபொருளாக மாறி இருக்கிறது, முழு விவரம் பின்வருமாறு:-
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா நகரிலுள்ள ஆஞ்சநேயா சுவாமி சிலை அருகே புதன்கிழமை இரவு 7 மணி அளவில் இரண்டு திருநங்கைகள் அனந்தப்பூர் மாவட்டம் கதிரிக்கு செல்லும் வாகனங்களை மடக்கி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இரண்டு திருநங்கைகளையும் பார்த்த இரண்டு கார்கள் நின்றன,
இதையும் படியுங்கள்: அண்ணி என்று கூட பாராமல் நடுரோட்டில் கொழுந்தன் செய்த வெறிச்செயல்..!
அதில் 15 க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தனர், அப்போது 35 வயதுடைய திருநங்கையை கேலி கிண்டல் செய்த அந்த கும்பல் திருநங்கை என் கையை பிடித்து இழுத்து வம்பு செய்தது, பின்னர் காருக்குள் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த திருநங்கை அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடிவிட்டார்.
ஆனால் அங்கு அறுபது வயது மதிக்கத்தக்க திருநங்கை அவர்களிடம் சிக்கிக் கொண்டார், அந்த திருநங்கை வயதானவர் என்றும் பாராமல் அவரை அந்த கும்பல் இருட்டான பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது, அந்த கும்பலில் இருந்த 15 பேரும் மாறி மாறி பாலியல் உறவுகளில் ஈடுபட்டனர். அதில் வலி தாங்க முடியாமல் அந்த திருநங்கை அலறினார்,
ஆனால் அருகில் யாருக்கும் இல்லாததால் அவரைக் காப்பாற்ற யாரும் வரவில்லை, பின்னர் அந்த கும்பல் தங்களது காம வெறி அடங்கிய பின்னர் அந்த திருநங்கையை அங்கேயே விட்டு சென்றது, பிறகு உயிர் பிழைத்து வந்த திருநங்கை பலத்த காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.