திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் 10-ம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் படித்த வேப்பம்பட்டை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அந்த பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த மாணவியை, மாணவர்கள் இருவரும் நைசாக பேசி திருவள்ளூரில் ரயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மின்சார ரயில் மூலம் வேப்பம்பட்டில் உள்ள மாணவனின் வீட்டுக்கு சென்றனர்.
நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் மாணவியும் அங்கு சென்றார். அங்கு மாணவர்களில் ஒருவரது வீட்டுக்கு மாணவி சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. அப்போது மாணவர்கள் இருவரும் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தெரிவித்து அந்த பெண்ணை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விட்டு விட்டு 2 மாணவர்களும் நைசாக சென்று விட்டனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜனனிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து, மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோதுதான் உடன்படிக்கும் மாணவர்கள் மகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.